பிரார்த்தனைக்கு சென்ற பாப்பரசருக்கு ஏற்பட்டநிலையால் பரபரப்பு!

பிரார்த்தனைக்கு சென்ற பாப்ரசர் லிப்டுக்குள் சிக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரோமில் உள்ள வத்திக்கான் சிட்டியில், அப்போஸ்தல மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் பாப்பரசர் பிரார்த்தனை நடத்துவார். பாப்பரசரின் பிரார்த்தனைக்காக புனித பீட்டர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்காணோர் ஒன்றுகூடுவர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் பாப்பரசர் பிரான்சிஸ், பிரார்த்தனை கூடத்துக்கு வருவார் என அனைவரும் காத்திருந்தனர். ஆனால் அவர் 7 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளார். பின்பு அவர் மக்களிடம் “தாமதமாக வந்ததற்கு மன்னித்து விடுங்கள், நான் 25 நிமிடங்களாக லிப்டுக்குள் சிக்கிக்கொண்டேன். என்னை தீயணைப்பு படையினர் மீட்டனர்” என கூறினார்.

இதனால் சிறிது நேரம் மக்களிடையே ஆரவாரம் ஏற்பட்டது. மின் இணைப்பு துண்டிக்கபட்டதால் லிப்டுக்குள் பாப்பரசர் சிக்கி கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்