2020 இல் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் அதிகரிக்கப்படும் – கௌரவ ஆளுநர்

மூன்று சதவீதமாகவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு வீதம் அடுத்த வருடம் அதாவது எதிர்வரும் 2020 ஜனவரி மாதம் முதல் 6 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

எம் மத்தியில் வாழும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளும் வாய்ப்புக்களும்’ என்ற தலைப்பில் யாழ் பொது நூலகத்தில் இன்று (05) மாலை நடைபெற்ற ஐந்தாவது வடக்கு வட்டமேசை கலந்துரையாடலில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் சவால்கள் அவர்களது தேவைகள் தொடர்பாக கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இதன்போது கௌரவ ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த வடக்கு வட்டமேசை கலந்துரையாடலில் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் சவால்கள் தொடர்பில் கௌரவ ஆளுநர் அவர்களுக்கு எடுத்துரைத்தார். இதன்போது அவர்களுக்கான சில தீர்வுகள் கலந்துரையாடலின் போதே கௌரவ ஆளுநர் அவர்களால் வழங்கப்பட்டது. தற்பொழுது 3 சதவீதமாகவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அடுத்த வருடம் அதாவது எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 6 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் கௌரவ ஆளுநர் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்து வசதிகளும் அவர்களது தேவைகள் தொடர்பிலான அறிவுறுத்தல்களை திணைக்கள தலைவர்களுக்கு வழங்கவுள்ளதாக கௌரவ ஆளுநர் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்