அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்தும் விவகாரம் குறித்து ஆராயப்படும்: சிங்கப்பூர்

அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்துமாறு விடுக்கப்படும் கோரிக்கை குறித்து ஆராயப்படுமென சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சினை மேற்கோள்காட்டி த ஸ்ரேட் டைம்ஸ் செய்தி தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

எழுத்து ஆவணங்கள் கிடைக்க பெற்றவுடன் சிங்கப்பூர் சட்டத்திட்டத்திற்கமைய அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பாக ஆராயப்படும் என சிங்கப்பூர் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அவர் தொடர்பான தகவல்களை சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கையளிப்பதற்கான 21 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை சட்டமா அதிபர் வெளிவிவகார அமைச்சிடம் கையளித்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதேபோன்று பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்