ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமரின் செயலாளர் முன்னிலை!

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க முன்னிலையாகவுள்ளார்.

இவர் இன்றைய தினம் இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விவசாயத்துறை அமைச்சின் கட்டடம் குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகவுள்ளார்.

குறித்த கட்டடம் குத்தகை அடிப்படையில் விவசாயத்துறை அமைச்சினை நடாத்திச் செல்வற்காக பெறப்பட்டுள்ள நிலையில், அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி பத்திரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த வர்த்தமானி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆணைக்குழுவிற்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்