உயிரியல் பூங்கா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

உயிரியல் பூங்கா ஊழியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கவுள்ளதாக உயிரியல் பூங்கா தொழிற்சங்கங்கள் சில  அறிவித்துள்ளன.

தமது ஊழியர்களின் இடைக்கால கொடுப்பனவு மற்றும் வரவுக் கொடுப்பனவை அதிகரிக்குமாறு சுமார் ஒரு வருட காலமாக கோரி வந்த நிலையில் அதனை செயற்படுத்த நடவடிக்கை எடுக்காதமையை கண்டித்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லையென்றால் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் உயிரியல் பூங்கா ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்