பெண்களுக்கான வாழ்வாதார உதவி

ஆனைக்கோட்டை முள்ளி கிராமத்தில் வசிக்கும் தெரிவுசெய்யப்பட்ட பெண்களுக்கான வாழ்வாதார உதவிகளைதமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள் கடந்த 04.09.2019ம் திகதி முள்ளி கிராம பொதுமண்டபத்தில் வழங்கி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்வு வலி தென்மேற்குபிரதேச சபை உறுப்பினர் கௌரவ த. தயாபரன் தலைமையில் நடைபெற்றது.

தலைமையுரைக்குப் பின் உரையாற்றிய திரு வீ. ஆனந்தசங்கரி அவர்கள்ரூபவ் யுத்தத்தின் பின்னர் பெண்கள்தலைமைத்துவ குடும்பங்கள் படும் வேதனை கொஞ்சநஞ்சமல்ல. யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகியும் பாதிக்கப்பட்டமக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் மக்களைப்பற்றி சிந்திக்காது
செயற்படுகின்றனர். என்றுமில்லாதவாறு நல்லாட்சி என்று கூறப்படுகின்ற இந்த அரசுதான்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகளவு சலுகைகளையும் கொடுப்ணவுகளையும தாராளமாக அள்ளிவழங்குகின்றது.

ஆனால் மக்களுக்கு எதுவிதமான உதவிகளும் சலுகைளும் கிடைப்பதில்லை எனக் குறிப்பிட்டார்.அது மட்டுமல்ல நான் அன்றுதொட்டு கூறிவருகின்றேன் 1970ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில்இருந்ததைப் போன்று கூப்பன் முறைமையினை நடைமுறைப்படுத்தி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பெருந் தோட்டப்பகுதியில் அன்றாடம் பிரச்சினைகளை எதிர் நோக்கும் மலையக மக்களுக்கும் பங்கீட்டு முறையில் உப உணவுப் பொருட்களை வழங்கினால் அவர்களின் வாழ்வாதாரம் ஓரளவு மேம்படும்.

ஆனால்எவரும் பாராளுமன்றத்தில் இதுபற்றி பேசுவதில்லை. நல்ல திட்டமாக இருந்தாலும் ஆனந்தசங்கரிகூறிவிட்டாரே இதைப்பற்றி நாம் பாராளுமன்றத்தில் எப்படி பேசுவதுரூபவ் என்று நினைக்கின்றார்கள் போலும். யுத்தத்தில் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கும் பலர் அங்கவீனர்களாக இருப்பதற்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டதற்குமான முழுப்பொறுப்பையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும்.

அதற்கு பிராயச்சித்தம் தேடுவதற்காக முள்ளிவாய்காலில் நினைவுச்சின்னம் கட்டவேண்டும் என்று கூறுகின்றார்கள். கூட்டமைப்பினர் நினைத்திருந்தால் யுத்தத்தை நிறுத்திரூபவ் மக்களையும் பாதுகாத்திருக்கலாம்ரூபவ் அதைவிடுத்து இப்போது நினைவுச்சின்னம் கட்ட வேண்டும் என்கிறார்கள் அவர்களுக்கு வெட்கம் இல்லையா? எனவும் கேட்டார்.

அடுத்து உரையாற்றிய நிர்வாகச் செயலாளர் இரா. சங்கையா தனதுரையில் சிலப்பதிகாரத்தில் தனது கணவன்கோவலன் கொல்லப்பட்டதை  வெறுமனே வேடிக்கை பார்த்து நின்றதனை பொறுக்கமுடியாமல் மதுரை மாநகரையே எரித்து பழி தீர்த்துக் கொண்டாள் கண்ணகி. ஆனால் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான கோவலன்கள் கொல்லப்பட்டபோது வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றவர்களைத்தான் மீண்டும் மீண்டும்
பாராளுமன்றம் அனுப்பிவைத்ததன் விளைவையே இன்றும் மக்கள் அனுபவிக்கின்றார்கள்.

பெண்களாகிய நீங்கள் மதுரையை எரித்த கண்ணகிகளாக மாறவேண்டும். அப்போதுதான் நேர்மையானவர்கள் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்வார்கள் எனக்குறிப்பிட்டார்.
அடுத்து இவ்வாறான உதவிகளை செய்தமைக்காக திருமதி எஸ். அனுயா அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி தொடர்ந்தும் இப்படியான செயற்திட்டங்களை மேற்கொண்டுரூபவ் பெண்களின் வாழவாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்