இடைநிறுத்தப்பட்ட ஓமந்தை சேமமடு கிராமிய வைத்தியசாலை பணிகள் மீண்டும் ஆரம்பம்

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்தின் முயற்சியினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சேமமடு கிராமிய வைத்தியசாலையின் கட்டுமான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


2017 ஆம் ஆண்டில் அப்போதைய மாகாண சுகாதார அமைச்சரான மருத்துவர் ப.சத்தியலிங்கத்தின் கிராமிய சுகாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சேமமடுவில் கிராமிய வைத்தியசாலை அமைக்கும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.(மத்திய மீள்குடியேற்ற அமைச்சின் நிதி)


எனினும் அமைச்சரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் கட்டுமானப் பணிகளை தொடர நிதி பற்றாக்குறை ஏற்பட்டது.

இதனால் கடந்த ஒருவருடத்திற்கு மேலாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இதுதொடர்பில் பிரதேச மக்கள் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து தேசிய கொள்கைகள் திட்டமிடல் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சிடம் ரூபா 10 மில்லியன் நிதி, வைத்தியர் சத்தியலிங்கத்தின் சிபார்சின்பேரில் கிடைக்கப்பெற்றதையடுத்து தற்போது கட்டுமான வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்