கஞ்சிபானை இம்ரானை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவரென கூறப்படும் கஞ்சிபானை இம்ரானை எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

வாழைத்தோட்டம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையொன்றை  ஆராய்ந்த பின்னர் பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பித்துள்ளார்.

20 கிராம் போதைப்பொருளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ´சுசந்த’ என்ற கஞ்சிபானை இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது வெளிநாட்டில் இருந்த கஞ்சிபானை இம்ரான், தொலைப்பேசி அழைப்பு ஊடாக சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவரை அச்சுறுத்தி,  தகாத வார்த்தைகளால் பேசியதாக குறித்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் சந்தேகநபராக கஞ்சிபானை இம்ரானை பெயரிட தீர்மானித்துள்ளதாக அந்த கோரிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த கோரிக்கையை ஏற்ற பிரதான நீதவான், எதிர்வரும் 9 ஆம் திகதி,  கஞ்சிபானை இம்ரானை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்