கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணாமல் போனவர்களின் 29 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த நிலையில் காணாமல்போன 158 பேரின் 29ஆம் ஆண்டு நினைவு கூறலும்  நீதிகோரலும் இடம்பெற்றுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் குறித்த நினைவு கூறல் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

கிழக்கு பல்கலைகழக மாணவர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஆகியன இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவுகள், நீதிகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சுடர் மெழுகுவர்த்தி ஏற்றி நினைவு கூர்ந்தனர்.

கடந்த 1990 ஆம் ஆண்டு செட்டெம்பர் 5ஆம் திகதி  கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் 158 பேர் காணாமலாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்