தவறாக வழிநடத்தப்படும் பெரும்பான்மை மக்கள்! சம்பந்தன் ஆதங்கம்

தேசிய தலைவர்களெனக் கூறிக்கொள்வோர், பெரும்பான்மையின மக்களை, தவறாக  வழிநடத்தி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “சிறுபான்மைச் சமூகங்களைத் தொடர்ந்து புறக்கணிப்பதனால் நாடு மீண்டும் அழிவுக்குள் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சுதந்திரமடைந்து 70 வருடங்களைக் கடந்த நிலையில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க தேசிய அரசியல் கட்சிகள் தவறியுள்ளன.

அந்தவகையில் தென்னிலங்கையின் தேசியத் தலைவர்கள் எனக் கூறிக்கொள்வோர், பெரும்பான்மையின மக்களின் ஆதரவை பெறுவதற்காகவும் தமது சுயநல அரசியலுக்காகவும் அவர்களை தவறாக வழிநடத்துகின்றனர்.

மேலும்  சிறுபான்மைச் சமூகங்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்