அமைச்சர் மனோ கணேஷன் அவர்களின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான சிங்கள மொழி கற்கை நெறி

தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் ,சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேஷன் அவர்களின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் ஊடகவியலாளர்களுக்கான இலவச சிங்கள மொழி கற்கை நெறி நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் எதிர்வரும் 08.09.2019 தொடக்கம் 19.09.2019ம் திகதி வரை தொடர்ச்சியாக 12 நாட்கள் இடம்பெறவுள்ளது.

சிலோன் மீடியா போரத்தின் கோரிக்கைக்கு அமைய இக்கற்கை நெறியினை அம்பாறை மாவட்ட ஊடகவிலாளர்களுக்கு வழங்குவதற்கு , அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாரும் ஸ்மார்ட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் கே.எம்.ரிஸ்கான் முகம்மட் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்