ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக சந்திரிகா முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான சுதந்திரக் கட்சியின் வேட்பாளரை இறுதி நேரத்திலேயே அறிவிப்போம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த னாதிபதித் தேர்தலுக்காக இறுதி நேரத்தில் பொதுவேட்பாளர் அறிவிக்கப்பட்டதைப் போன்றே இந்த வருடம் நடவடிக்கை எடுப்போம் என கூறினார்.

சர்வதேச செய்தி நிறுவனத்தின் கொழும்புச் செய்தியாளருக்கு இன்று (திங்கட்கிழமை) வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் மேலும் இங்கு  தெரிவித்துள்ளதாவது, “சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் நான் பங்கேற்றியிருந்தேன். அந்தக் கட்சி எனது தாய் வீடு. முதலில், அந்தக் கட்சியிலுள்ள களைகளை அகற்றவேண்டும்.

அந்தக் கட்சிக்கு விசுவாசமானவர்களுடன் தொடர்ந்தும் இருப்பேன். சுதந்திரக் கட்சி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இப்போதே முடிவை வெளியிடாது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இறுதி நேரத்தில் இடம்பெற்றதைப் போன்று, அதிரடியான முடிவை எடுக்கும்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்