சோகமானது காரைதீவு : கண்ணீரோடு விடைபெற்றார் அக்ஸயா..!

மின்னொழுக்கு காரணமாக காரைதீவில் உயிரிழந்த மாணவி அக்ஸயாவின் இறுதிக் கிரியைகள் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது.

காரைதீவு 10ம் பிரிவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (திங்கட்கிழமை ) இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.

அதனையடுத்து அன்னாரின் சடலம் காரைதீவு மத்திய வீதி ஊடாக எடுத்துச் செல்லப்பட்டு, காரைதீவு இந்து மயானத்தில் இறை வழிபாட்டுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த சனிக்கிழமை பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய வேளை பாடசாலை மாணவி அக்ஸயா திடிரென எரிந்த நிலையில் சடலமாக தரையில் வீழ்ந்த நிலையில் காணப்பட்டார் .

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கதிர்காமத்தம்பி வீதி நடேஸ்வரராஜன் அக்ஸயா (வயது-17) என்பவர் ஆவார்.

குறித்த மாணவி கல்முனை உவெஸ்லி கல்லூரியில் கா.பொ.த உயர்தர முதலாம் ஆண்டில் பௌதீக விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்