வெளிநாடொன்றிற்கு சென்ற வவுனியா இளைஞனுக்கு நடுக்கடலில் காத்திருந்த அதிர்ச்சி!

சட்ட விரோதமான முறையில் இந்தியாவுக்கு சென்ற வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவரை தமிழக காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞர் கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் அவர் ராமேஸ்வரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வவுனியாவைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த இளைஞர் இந்தியாவுக்கு சென்றதன் காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பில் அவரிடம் தொடர்ந்தும் தமிழக காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்