ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் – முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார் சஜித்!

ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலின் பெறுபேறுகளை எதிர்வரும் நாட்களில் காண முடியுமென அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் நேற்றிரவு(செவ்வாய்கிழமை) மிக முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

குறித்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘கலந்துரையாடல் மிகவும் சுமுகமாக இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தே கலந்துரையாடப்பட்டது.

அதோபோன்று எதிர்கால சவால்கள் குறித்தும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கொள்கின்ற சவால்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான விடயங்கள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்தும் எதிர்காலத்தில் அறிவிப்போம்.

ஒட்டுமொத்தமாக குறித்த பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாகவும் ஆரோக்கியமானதாகவும் இடம்பெற்றது. கலந்துரையாடலின் பெறுபேறுகளை எதிர்வரும் நாட்களில் காணமுடியும்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்கிரம, ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்துமபண்டார, கபிர் ஹசிம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்