எழுக தமிழுக்கு ஆதரவுகோரி வலைப்பாடு கிராமத்தினருடன் சந்திப்பு!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட லைப்பாடு கிராம மக்களுடன்வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவுகோரி தமிழ் மக்கள் பேரவையினர் சந்தித்து லந்துரையாடியுள்ளனர்.

வலைப்பாடு கிராமத்தை சேர்ந்த சமூ செயற்பாட்டாளர்களது அழைப்பின்பேரில் நேற்று இரவு 7 மணிக்கு ஜெகமீட்பர் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவை சார்பில் எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழுவினர் சென்று கலந்துரையாடல் நடத்தியுள்ளார்கள்.

வலைப்பாடு .தொ.கூ.சங்க நிர்வாகிகள்வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டுக் கழகம் மற்றும் சென் ஆன்ஸ் விளையாட்டுக் கழக வீரர்கள்கிளி/76 பொன்னாவெளி கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் ஜெகமீட்பர் சனசமூக நிலைய நிர்வாகிகள் பங்கேற்றிருந்த இச்சந்திப்பில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் தமிழர்கள் தேசமாக அணிதிரள வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டிருந்ததுடன் தமிழ்த்தேசிய அரசியல் போக்கு குறித்தும் மக்கள் இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும் ஆரோக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்