தீவகத்தில் பாடசாலைகளின் கட்டடங்களை திறந்து வைத்தார் சிறீதரன் எம்.பி

தீவகத்தில் இருவேறு பாடசாலைகளின் கட்டடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

முதலில் வேலணை தெற்கு துறையூர் ஐயனார் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
பாடசாலையின் பிரதி அதிபரின் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருடன் வலயக் கல்வி பணிப்பாளர் கோட்டக்கல்வி அதிகாரியும் வைத்தியர்களும் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் புங்குடுதீவு மகாவித்தியாலயத்தின் அதிபர் விடுதியும் நாடாளுமன்ற உறுப்பினரால் திறந்து வைக்கப்பட்டது பாடசாலையின் முதல்வர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினரோடு கலந்து கொண்டனர்.இந்நிகழ்வுகளில் பிரதேச சபையின் உறுப்பினர்களான அசோக்குமார் பார்த்தீபன் நாவலன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அயல் பாடசாலை சிறந்த பாடசாலை எனும் செயற்திட்டத்தின் கீழேதான் இரண்டு பாடசாலைகளினதும் கட்டடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்