முடங்குகின்றன மாகாண சபைகள் மூச்சிழுக்கின்றன இயங்கு நிலைகள்

முடங்குகின்றன மாகாண சபைகள்
மூச்சிழுக்கின்றன இயங்கு நிலைகள்

அரசு செய்யப்போவது என்ன? கேள்வி எழுபுகிறார் நஸிர் அஹமட்

“மாகாண சபைகளின் வரிசேகரிப்பு மற்றும் சட்டபூர்வமான கொடுப்பனவுகள் உட்பட அனைத்து
நிர்வாகச் செயற்பாடுகளும் – அதற்கான சட்டபூர்வமான அதிகாரம் இல் லாமை மற்றும் நிதி
பற்றாக்குறை காரணமாக முடங்கும் அவலநிலை ஏற்பட்டுள் ளது. இதனை உள்ளூராட்சி மற்றும்
மாகாணசபை அமைச்சு வட்டாரத் தகவல்கள் மூலமாக அறியமுடிகிறது. மாகாண சபைகளுக்கு இந்த நிலைமை
ஏற்படுவதற்கு பிரதமரும் அமைச்சரவையினருமே பொறுப்பாளிகள் என்பதைக் கடும் கண்டனத்து டன்
தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.”

இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-
மாகாண சபைகளின் நிர்வாகச் செலவினங்களுக்கான நிதியை திறைசேரியிலுள்ள மாகாண
சபைகளுக்கான திரட்டிய நிதியிலிருந்து மாகாண சபைகளின் முதலமைச் சர்களால் வழங்கப்படும்
உத்தரவாதத்தின்பேரில் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும் தற்போது பெரும்பாலான மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந் துள்ள நிலையில்
அவை ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள் ளமையால் ஆளுநர்களின்
நிர்வாகம் இந்த நிதியைபெறுவதற்கு சட்டபூர்வமான அதிகாரம் இல்லாத நிலையிலேயே மாகாண
சபைகள் தற்போது இயங்கிவருகின் றன. இதனால் சபைகளின் வழமையான செயற்பாடுகளுக்கான
நிதியைப் பெற முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் மாகாணசபைகள் அவற்றின் ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும்
அன்றாட செலவினங்களுக்கான நிதியை திறைசேரியின் திரட்டிய நிதியி லிருந்து கடனாகவும்
அமைச்சுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளில் இருந்தும் பெற்று வருகின்றன என்பதை அறிய
முடிகிறது.
இந்நிலையில் சமகாலத்தில் மாகாண சபைகளின் வரிசேகரிப்பு குறைந்துள்ளதால் திறைசேரியில்
திரட்டிய நிதியும் குறைவடைந்துள்ளது அத்துடன் பட்ஜெட் மதிப்பி டுகளுக்குமேலாக மாகாண
சபைகளின் செலவினங்கள் அதிகரித்துள்ளன. இவை ஒட்டுமொத்தமாக மாகாண சபைகளின் இயக்கத்தை
பாதித்து வருகின்றன.

நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் சகல முதலமைச் சர்களையும்
ஒன்றிணைத்து மாகாண சபைகளின் நிதி விடயங்களில் பல்வேறு அழுத்தங்களை அரசுக்கு கொடுத்து
விகிதாசார ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டோன். இதன்
காரணமாக திரட்டிய நிதிகளை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைளுக்காக புதிய தொழில் வாய்ப்பு
களை ஏற்படுத்தி அதனூடக வருமானங்களை அதிகரிக்க செய்தோம். குறிப்பாக கிழக்கில்
அருகிலுள்ள பாடசாலைரூபவ் சிறந்த பாடசாலை  நெடுஞ்சாலை மற்றும் வீதி புணரமைப்பு பணிகள்
பலவற்றை மேற்கொண்டு வந்தோடுரூபவ் கல்வித்துறைக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுவந்த நிதி
ஒதுக்கீடுகளை அதிகரிக்கச் செய்து வந்தோம்.

மாகாண சபைகளின் ஆட்சிகாலம் முடிவடைந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டபோதும்
மாகாண தேர்தல் நடத்தப்படாது குழப்பமான அரசியல் சூழ் நிலை உருவாக்கம் பெற்றிருக்கிறது.
இதனை சாதுரியமாக அரசு செய்து வருகின்ற தா என்ற சந்தேகமும் நிலைபெற்றுள்ளது.
இந்நிலையில்ரூபவ் மாகாண சபைத் தேர்தல் இப்போதைக்கு நடைபெறக்கூடிய சாத்தி யம் இல்லாத நிலைமை
ஏற்பட்டுள்ளது. மாகாண சபைகளின் செயற்பாடு என்பது தேக்கம் அடைவதுடன் அவை முற்றாக செயல்
இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையானது மக்களின் ஜனநாயக உரிமைகள் குழிதோண்டி புதைக்கப்பட் டுள்ள அவலத்தையே
எடுத்துக் காட்டுகின்றது. இதனை சீர் செய்ய அரசாங்கம் எடுக்கபோகும் நடவடிக்கை என்ன என்பதை
உடன் தெரிவித்தாகவேண்டும்.தொடர் ந்து அரசுக்கு முண்டுகொடுத்துக் கொண்டிருக்கும் அரசியல்
சக்திகளும் இதற்கான விடையை மக்கள் தரப்புக்கு முன் வைக்கவேண்டும் – என்றுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்