வதிவிடக் கட்டிடத்திற்குப் பதிலாக புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

மட்டக்களப்பு நகரத்திற்கு வரும் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கோடு புகையிரத ஒழுங்கை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் அகற்றப்படவுள்ள புகையிரத நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தயோகத்தரின் வதிவிடக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு  இன்று (11) இடம்பெற்றது.

மாநகரசபையின் அரசடி 10 ஆம் வட்டார உறுப்பினரும் மாநகர சபையின் சுகாதார நிலையியற் குழுவின் தலைவருமான சிவம் பாக்கியநாதனின் பிரேரணைக்கு அமைவாக ரூபாய் 8 மில்லியன் செலவில் குறித் வீதி விரிவு படுத்தப்படுகின்றது.

கல்முனை மற்றும் அம்பாரைப்  பிரதேசங்களுக்குச் செல்லும் வாகனங்களை மாற்று வளியில் திருப்பி அனுப்பும் நோக்கோடு 33 அடி அகலமான இருவழிப்பாதையை அமைப்பதற்கு குறுக்காக இருந்த வதிவிடக் கட்டிடம் உடைக்கப்பட்டு அதை நிர்மாணித்துக் கொடுக்கும் நோக்கோடு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் கே.சத்தியசீலன்,வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டப் பணிப்பாளர் பி. பத்மராஜா, பிரதம பொறியியலாளர் திருமதி கே. வன்னியசிங்கம், மாநகர பொறியியலாளர் சித்திரா லிங்கேஸ்வரன் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்