ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என அறிவித்தார் ரணில்!

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாளைய தினம்(வியாழக்கிழமை) முன்னிலையாக முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

முன்னதாக திட்டமிடப்பட்ட சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என பிரதமரின் செயலாளரினால் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமருக்கு மீள் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்