மன்னாரில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம்

மன்னாரில் இளைஞர், யுவதிகள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயலமர்வு இடம்பெற்றது.

இன, மத ரீதியான வேறுபாடுகளை அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விழுமிய பண்புகள் ஊடாக செயற்படுத்தி நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆசிய ஒன்றியத்தினுடைய இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது.

சர்வோதயம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பங்களிப்புடன் இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் இந்த செயலமர்வு இன்று (புதன்கிழமை) காலை மன்னார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

குறித்த செயலமர்வில் அனைத்து மதங்கள் மற்றும் இனங்கள் மத்தியில் காணப்படும் பொதுவான விழுமியப் பண்புகள் ஊடாக சமூகத்தில் முரண்பாடுகள் பாரபட்சம் வன்முறைகள் ஏற்படுவதைக் குறைப்பது தொடர்பாகவும் முரண்பாடுகள் ஏற்படுகின்ற சமயத்தில் இளைஞர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் விரிவுரைகள் மூலமும் நடைமுறைப் பயிற்சிகள் மூலமும் தெளிவுபடுத்தப்பட்டது.

ஆசிய ஒன்றியத்தினுடைய பயிற்சி வழங்குநர்களான றம்சி மற்றும் தெவுனி ஆகியோர் விரிவுரைகளை வழங்கியதுடன் குறித்த பயிற்சிகளை பெற்றுக்கொண்ட இளைஞர்கள் தொடர்ச்சியாக மாவட்ட ரீதியில் உள்ள இளைஞர்கள் யுவதிகளுக்கான பயிற்சிகளை வழங்கவுள்ளனர்.

இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 10 மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் யுவதிகளுக்கு இப்பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்கள் ஊடாக ஏனைய இளைஞர்களுக்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்