மண் அகழ்வை கண்டித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்!

புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பழைய எலுவான்குளம் கிராமத்தில் மணல் அகழ்வில் ஈடுபடுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு அகழப்படும் மணலை அக்கிராமத்தின் பாதையின் ஊடாக கொண்டு செல்வதினால் பாதை சேதமடைவதுடன் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதற்கான தீர்வு கிடைக்கும் வரை தாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

குறிக்க மக்கள் மணல் அகழ்வதற்கு செல்லும் வீதியை மறித்து இன்று (புதன்கிழமை) இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற வண்ணாத்திவில்லு பிரதேச சபைத் தலைவர் சமந்த முனசிங்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

இதையடுத்து இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்