பிக்குகள் மீது தாக்குதல் – சந்தேக நபருக்கு விளக்கமறியல்!

சிறிய பிக்குகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம்(புதன்கிழமை) பதவிய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போதே அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து, ஹொரவபொத்தானை பொலிஸாரால் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்