ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி எதிர்வரும் 26ஆம் 27ஆம் திகதிகளில் அவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

சம்பள பிரச்சினை மற்றும் கற்பிக்கும் காலத்தில் சுதந்திரத்திற்கு இடையூறு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போராட்டத்திற்கு ஆசிரியர் மற்றும் அதிபர்களின் 30 தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்கவுள்ளன.

இதேவேளை, பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்துள்ள தொடர்ச்சியான போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக கல்விசார ஊழியர் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கு அதிகாரிகள் உரிய பதில் வழங்காவிடின் போராட்டம் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியம் எச்சரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்