கிளிநொச்சியில் சட்டவிரோத உப்பளம் தென்னிலங்கையர்களினால் அமைப்பு!

கிளிநொச்சியின் உருத்திரபுரம் பகுதியின் செருக்கன் பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று சட்டவிரோதமான முறையில் உப்பளம் அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று சட்டவிரோதமான முறையில் உப்பளம் ஒன்று அமைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கு பொது மக்களால் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்  அங்கு சென்றார்.
குறித்த பகுதியில் அமைக்கப்படும் உப்பளமானது பிரதேச செயலாளர் பிரதேச சபை மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோரின் அனுமதி இன்றி அமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த உப்பளம் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டு வருவதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்படும் நிலையிலும் செருக்கன், பெரியபரந்தன் சாலம்பன் நீவில் பொறிக்கடவை உருத்திரபுரம் சிவநகர் இன்னும் பல கிராமங்களின் நீர் உவர் நீராகும் நிலையிலும் சுமார் 3000 மக்களின் வாழ்வு பாதிக்கப்படும் நிலையிலும் உள்ளது.ஏற்கனவே கிளிநொச்சியில் ஆணையிறவு சர்வதேச தரத்தில் வெள்ளை உப்பிற்கு பெயர் பெற்ற குறிஞ்சா தீவு உப்பளம் போன்றவை உள்ள நிலையில்  இந்த உப்பளம் இந்தப் பகுதிக்கு தேவையற்ற வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த விடயம் தொடர்பாக அங்கு வேலை செய்யும் மக்களிடம் வினாவியபோது குறித்த வேலைகள் ஆரம்பிக்கப்படும் முன்பு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறித்த நிறுவனத்தின் தலைவர்களுடன் வருகை தந்து கிராமத்தில்  கூட்டம் ஒன்றை நடாத்தியதாகவும் அந்த கூட்டத்தில் 35 பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாகவும் தமக்கு வழங்கிய வாக்குறுதியின் படியே தாங்கள் வந்து வேலை செய்வதாகவும் குறிப்பிட்டனர். கிராம மக்களின் முறைப்பாட்டை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் அந்த கிராம மக்கள் கரைச்சி   பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதனும் கலந்து கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்