புதிய அரசமைப்பு எப்படி வரவேண்டும்? – சார்ள்ஸ் எம்.பி. விளக்கம்

தமிழர்கள் கெளரவமாக வாழக் கூடிய வகையில் புதிய அரசமைப்பில் சரத்துகள் உள்ளடக்கப்படாவிட்டால். ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு ஆதரவளிக்கமாட்டோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

தனிப்பட்ட தேவைகளைக் கருத்தில்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘குறுகிய காலத்தில் தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாக எழுத்து மூலம் அரசுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அரசமைப்பு தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை சரியான முறையில் இறுதிப்படுத்தப்படவேண்டும்.

தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆளும் வகையில் அரசமைப்பில் மாற்றம் கொண்டுவந்தால் மாத்திரமே அதற்கு ஆதரவாக வாக்களிப்போம்’ – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்