தியாகி தீலீபனின் நினைவு தினம் கிழக்கிலும் அனுஷ்டிப்பு

தியாகச்சுடர் திலீபன் 32வது ஆண்டு நீங்காத தியாக வணக்க ஆரம்ப நாள் நினைவு கிழக்கு மாகாணத்திலும் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு வெல்லாவெளியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வெல்லாவெளி ஜனநாயக போராளிகள் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் நினைவுச்சுடர் ஏற்றி தியாகி திலீபனின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், ஜனநாயக போராளிகள் கட்சி மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட ஊடகபேச்சாளர் ப.சாந்தன், நிர்வாக பொறுப்பாளர் நா.தீபன், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, தியாகி திலீபனின் 32வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்