தாக்குதல் குறித்து விசாரணை: ஜனாதிபதி மைத்திரியை தெரிவுக்குழு நாளை சந்திக்கின்றது!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தெரிவுக்குழு முன் ஆஜராகும் விவகாரங்கள் குறித்து இறுதி செய்ய உள்ளது.

குறித்த சந்திப்பின்போது ஜனாதிபதி வழங்கும் சாட்சியங்களை ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்படும் என அக்குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையாகவுள்ளார். இதற்கு முன்னர் பெறப்பட்ட சாட்சிய பதிவுகளின்போது ஜனாதிபதி மீதே பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாதுகாப்பு சபை கூட்டம் தொடர்பான விடயங்கள் தொடர்பாகவே நாடாளுமன்ற தெரிவுக்குழு ஜனாதிபதியை கேள்வியெழுப்பவுள்ளதாக நாடாளுமன்ற தெரிவுக்குழு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் சாட்சியங்களை பெற்ற பின்னர் தெரிவுக்குழுவில் சாட்சியங்கள் முடிவுக்கு வர உள்ளன. இருப்பினும் குழுவின் இறுதி அறிக்கையைத் தொகுத்து முடிக்க நாடாளுமன்றத்தில் கால அவகாசம் கோரப்படும், இதன் பின்னர் அவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்