ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மக்கள் நிதானத்துடன் செயற்பட வேண்டும் – துரைரெட்னம்

ஜனாதிபதித் தேர்தலின்போது, வடக்கு – கிழக்கு வாழ் மக்கள் தங்களது வாக்குகளை மிகவும் நிதானத்துடன் செலுத்த வேண்டும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஐக்கிய தேசிய கட்சிக்குள் வேட்பாளர் தெரிவு தொடர்பாக போட்டி ஒன்று நிலவுகின்றது.

அதேபோன்று ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பாக ஏனைய கட்சிகளுக்குள்ளும் போட்டி நிலவுகின்றது. சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வினை யார் முன்வைக்கின்றார்களோ அவர்களுக்கு வாக்களிக்க தமிழ் மக்கள் தயாராக இருகின்றார்கள்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்