நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டாரவை நியமிக்கும் வர்த்தமானி வெளியானது!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டாரவை நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவின் மறைவை அடுத்து வெற்றிடமாகியிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சாந்த பண்டார தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்திருந்தார்.

எனினும் குறித்த வெற்றிடத்திற்கு எச்.எம்.டி.பி. ஹேரத் நியமிக்கப்பட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டார மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்