கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை சந்திக்கின்றார் ரணில்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது.

செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல், கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்கிழமை மாலை 3 மணியளவில் அலரிமாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை ஆதரிப்பது என்பது குறித்து இதன்போது பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்