ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரச்சார செயற்பாடுகள் ஆரம்பம்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட ரீதியிலான பிரச்சார செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி தேர்தலினை இலக்காக கொண்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த பிரச்சார செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலாவது பிரச்சார மாநாடு இரத்தினபுரியில் நடைபெறவுள்ளது.

இன்று நண்பகல் 2 மணியளவில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்