சிலரது அரசியல் இலக்கே எழுகதமிழ் நிகழ்வு – மாவை

எழுத தமிழ் பேரணி, சிலரது அரசியல் இலக்குகளை அடைந்துக்கொள்ள பயன்படுத்தப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எனினும் எழுக தமிழ் பேரணியின் கொள்கைப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘எழுக தமிழ் பேரணியில் பங்கேற்பதில் நடைமுறை சிக்கல்கள் இருந்தன.

எங்களுக்கு எதிரான அல்லது மாற்றுத்தலைமை ஒன்று பற்றி பல அறிக்கைகள் வெளியாகியிருந்தன.

நாங்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். ஆனால் அவர்கள் வேறு இலக்குகளுடன் இந்த பேரணியை பயன்படுத்துவதை நாங்கள் அறியக்கூடியதாக இருகின்றது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்