வடக்குமாகாண கைத்தொழில் கண்காட்சியில் முதல்வர் ஆனல்ட்

வடக்குமாகாண தொழிற்துறைத் தினணக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய கல்லூரியில் கைத்தொழில் கண்காட்சி நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொண்டதுடன் சிறப்புரை ஒன்றினையும் நிகழ்த்தினார்.

மேலும் இந் நிகழ்வில் வடக்குமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண அவைத்தலைவர், பேரவைச் செயலாளர், மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், கைத்தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்