அடுத்த 14 நாட்களுக்குள் முக்கிய அறிவிப்பு

அடுத்த 14 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் வெளியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுக்களுக்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நேற்று முதல் காணப்படுகின்றமையினால் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக கோட்டபாய ராஜபக்ஷ, அனுரகுமார திசாநாயக்க, துமிந்த நாகமுவ, ரோஹன் பல்லேவத்த ஆகியோர் அவரவர் கட்சிகள் சார்பாக பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நாள் மற்றும் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் கால எல்லை அடங்கிய சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்