மலேசியாவில் 68 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவில் 68 சட்டவிரோத குடியேறிகள் கைது 

மலேசியாவின் சாபா மாநிலத்தில் கிழக்கு சாபா பாதுகாப்பு கட்டளை தலைமையில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சட்டவிரோத குடியேறிகளாக அறியப்பட்ட 68 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

லாஹத் தடு(Lahad Datu) என்ற பகுதியில், ஆப்ரேஷன் கஷாக்(Gasak) என்ற பெயரில் இத்தேடுதல் வேட்டை சில தினங்களுக்கு முன்னர் நடத்தப்பட்டுள்ளது. 

 “5 மணிநேரம் நடந்த தேடுதல் நடவடிக்கையில், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்சைச் சேர்ந்த 43 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் கைது செய்யப்பட்டனர்,” என கிழக்கு சாபா பாதுகப்பு கட்டளைக்கு தலைமை வகிக்கும் ஹசானி கசாலி தெரிவித்துள்ளார். தேடுதல் நடத்தப்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்த 40 வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பப்டுள்ளது. 

இந்நடவடிக்கையில், காவல்துறைராணுவம், மலேசிய கடல்சார் அமலாக்க முகமை மற்றும் குடிவரவுத்துறையினரும் ஈடுபட்டனர். 

மலேசிய குடிவரவுத்துறையின் கணக்குப்படிகடந்த எட்டு மாதங்களில் சட்டவிரோத குடியேறிகளாக அறியப்பட்ட 41,041 வெளிநாட்டினர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்மலேசியாவில் சட்டவிரோதமாக பணியாற்றும் வெளிநாட்டினருக்கு மன்னிப்பு வழங்கி சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் திட்டம் வரும் டிசம்பர் 31 வரை நடைமுறையில் உள்ள போதிலும், சட்டவிரோத குடியேறிகளை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றது. 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்