ஜனாதிபதி தேர்தல்: ஒக்டோபரில் கட்டுப்பணம் செலுத்துகின்றார் அனுரகுமார திசாநாயக்க

ரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் முதலாம் திகதியே தேர்தல்கள் செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் கீழ் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தேர்தலில் களமிறங்குகின்றார்.

தற்போதுவரை 8 வேட்பாளர்கள் மட்டுமே ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தைனை செலுத்தியுள்ளனர்.

தேர்தல்கள் செயலகத்தின் தகவலின் பிரகாரம் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் 50,000 ரூபாயும் சுயேட்சை வேட்பாளர் 75,000 ரூபாயும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16 ம் திகதி நடைபெற உள்ளது, அதே நேரத்தில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி ஒக்டோபர் 7 ஆம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்