விசேட அமைச்சரவைக் கூட்டதிற்கு மைத்திரி அழைப்பு

அரசியல் விடயங்கள் உட்பட நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க விசேட அமைச்சரவைக் கூட்டதிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்

தற்போது நடைபெற்றுவரும் ரயில்வே வேலைநிறுத்த போராட்டம் குறித்து விவாதிக்க விசேட  அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு கூடவுள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சினால் கூறப்பட்டபடி அரசாங்கம் தங்கள் சம்பளத்தில் மேலதிகமாக 3,000 ரூபாயினை உயர்த்தவில்லை என தெரிவித்து இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் இஎவ்வாறாயினும், 8 அலுவலக ரயில்கள் மாத்திரம் இன்று காலை முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக ரயில்வே கட்டுப்பட்டு சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்