கெனோராவில் பெண்னொருவரை தாக்கிய கரடி!

தண்டர் பே- கெனோராவில் இந்த வாரம் பெண்னொருவர் கரடியின் தாக்குதலுக்கு உள்ளானதாக ஒன்ராறியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) காலை 11:15 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ரைஸ் லேக் வீதியில் நடந்து கொண்டிருந்தபோது, கருப்பு கரடியால் தான் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

இதன்பிறகு ரைஸ் லேக் வீதிப் பகுதியில் குறித்த கரடியை கண்டுபிடித்த பொலிஸார், இந்த தாக்குதலை பின்னர் உறுதி செய்தனர்.

இந்த மாதம் வடமேற்கு ஒன்ராறியோவில் நடந்த இரண்டாவது கரடி தாக்குதல் சம்பவம் இதுவாகும். செப்டம்பர் 1ஆம் திகதி ரெய்னி ஏரியில் ரெட் பைன் தீவில் 62 வயதான பெண் ஒருவர் கருப்பு கரடியால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்