ஐ.தே.கவின் தேர்தல் அறிக்கைக்காக காத்திருக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு!  – ரணிலிடம் சம்பந்தன் இன்று நேரில் எடுத்துரைப்பு

ஐ.தே.கவின் தேர்தல் அறிக்கைக்காக
காத்திருக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு!

– ரணிலிடம் சம்பந்தன் இன்று நேரில் எடுத்துரைப்பு

ஐக்கிய தேசிய கட்சியினால் ஜனாதிபதித் தேர்தலுக்காக முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன என்பதை ஐக்கிய தேசியக் கட்சி ஒளிவு மறைவில்லாது நாட்டு மக்கள் மத்தியில் அறிவிக்க வேண்டும் எனப் பிரதமர் ரணில் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி முன்வைக்கும் தீர்வு என்ன என்பதைப் பொறுத்தே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா? இல்லையா? என்ற தீர்மானம் எடுப்போம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரதான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை தமது தீர்மானம் என்னவென்பதை அறிவிக்காதுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அழைப்பை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா..சம்பந்தன்  மற்றும் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இன்று பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்தனர்.

இதன்போதே சம்பந்தன் மேற்கண்ட விடயங்களை வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, ரவி கருணாநாயக ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்