தேர்தல் தொடர்பான உயர்மட்ட ஆராய்வு

தேர்தலுக்கு முந்திய மதிப்பீட்டை மேற்கொள்ள இலங்கை வந்துள்ள அமெரிக்க வொஷிங்டன் நகரில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் சர்வதேச விவகாரங்களுக்கான தேசிய ஜனநாயக நிறுவனத்தின் தூதுவர் கார்ல் இன்டர்பேத் தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவினர் இன்று (02) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் சந்தித்து கலந்துரையாடினர்.
இலங்கையில் தேர்தல்களின்போது எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் குறித்து இதன்போது நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது கிழக்கு மாகாணத்தின் தேர்தல் தொடர்பான விபரங்கள் மக்களின் செயற்பாட்டுத் திட்டங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் மக்களுக்குமுள்ளான தொடர்பு நிலை போன்ற விடயங்களும் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்