வவுனியாவில் பாடசாலை மாணவி மீது பாலியல் வன்புனர்வு; குற்றவாளி தலைமறைவு

வவுனியா சிதம்பரபுரம், கற்குளம் பகுதியில் நேற்றையதினம் (02.10) பாடசாலை மாணவி ஓருவர் பாலியல் வன்புனர்வுக்குள்ளாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

வவுனியா, சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் வசிக்கும் குறித்த பாடசாலை மாணவியுடன் (வயது-15) அதே பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய குறித்த நபர் தொலைபேசி மூலம் சில தினங்களாக கலந்துரையாடியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த நபர் நேற்றையதினம் காலை 10.00 மணியளவில் தொலைபேசி மூலம் பாடசாலை மாணவியை கற்குளம் பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதிக்கு வருமாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த மாணவியும் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன் போது பாடசாலை மாணவி மீது குறித்த நபர் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

அதன் பின்னர் வீடு திரும்பிய பாடசாலை மாணவி இச்சம்பவம் தொடர்பில் தந்தையிடம் தெரிவித்தமையினையடுத்து தந்தை, மாணவியை  வவுனியா பொலிஸார் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இவ்விடயம் தொடர்பில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் வவுனியா பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், மருத்துவ பரிசோதனைகளுக்காக மாணவி வவுனியா  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்