வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாருக்கு எதிராக வவுனியாவில் தனிமனிதனொருவர் போராட்டம்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுவதாக தெரிவித்து வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (03.10.2019) காலை தொடக்கம் மதவுவைத்தகுளம் சனசமூக நிலையத்தின் உபதலைவர் மாணிக்கம் சிவச்சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மதவுவைத்தகுளம் பகுதி மக்களுக்கு நான் பல வருடகாலமாக நீர் விநியோகம் மேற்கொண்டு வருகின்றேன். வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் என் மீது பொய்யான காரணங்களை முன்வைத்து என்னை நீர்விநியோக பணியிலிருந்து நீக்கி வேறோரு நபருக்கு நீர்விநியோக பணியினை வழங்கியுள்ளார். தவிசாளரின் தன்னிச்சனையான முடிவுக்கு தீர்வு வேண்டுமென தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

‘தெற்கு பிரதேச சபை தவிசாளருக்கு எதிரான போராட்டம் எனக்கு நீதி வேண்டும்’ என்ற வசனத்தினை தாங்கிய பதாதையினை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் அவர்களை தொலைபேசியுடாக தொடர்பு கொண்டு வினாவிய போது,

கடந்த ஜந்து நாட்களாக பொது மக்களுக்கு நீரினை விநியோகம் செய்யாது நீர் விநியோக கட்டிடத்தின் சாவியினை குறித்த நபர் வவுனியா தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை காரியாலயத்தில் ஒப்படைத்துள்ளார்.

மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள நீர்வழங்கல் திட்டம் எமது பிரதேச சபைக்கு சொந்தமானது எனவே தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையிடம் சாவினை பெற்று பிரிதொரு நபரிடம் வழங்கி மக்களுக்கான நீர் விநியோகத்தினை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்..

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்