சஜித்துக்கு ஐ.தே.க. மாநாடும் அங்கீகாரம்! – 6 யோசனைகள் இன்று நிறைவேற்றம்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கு கட்சி மத்தியசெயற்குழு எடுத்த முடிவுக்கு, கட்சியின் சம்மேளனம் இன்று ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனம் கட்சி தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு – சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்று வருகின்றது.

இதன்போதே சஜித்தின் பெயரை முன்மொழிந்து, அனுமதியை கோரினார் கட்சி தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. இதற்கு ஏகமனதாக அங்கீகாரம் கிடைத்தது.

1.அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல், தேர்தல் முறைமையில் சீர்திருத்தம் செய்தல், பிரதமரின் இணக்கப்பாட்டுடன் அமுலாகும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி போன்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்ந்தும் முன்னெடுத்தல்.

2.கட்சி தலைவர் பதவிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பதற்கு கட்சி செயற்குழு எடுத்த தீர்மானத்தை கட்சி மாநாடு மீண்டும் உறுதி செய்கின்றது.

என்பது உட்பட 6 யோசனைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

முதலாவது பிரேரணையை கட்சி தலைவர் முன்மொழிந்தார். அதனை தேசியப்பட்டியல் எம்.பி. சுவாமிநாதன் வழிமொழிந்தார்.

ஏனையவற்றை கட்சி பொதுச்செயலாளர் முன்மொழிய, அவற்றை சுவாமிநாதன் வழிமொழிந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்