தரம் iii அதிபர் சேவை நியமன புறக்கணிப்புக்கு அங்கஜன் எம்பி நடவடிக்கை

தரம் iii அதிபர் சேவை நியமனத்திற்காக கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற
போட்டி பரீட்சையில் நேர்முகத்தேர்வுக்கு தோற்றியோரில், 1858 பேருக்கான நியமன
ஏற்பாடுகளில் கல்வி சமூகம் ஓரங்கட்டப்பட்ட துர்ப்பாக்கிய நிலை நல்லாட்சியை நிலை
நிறுத்துபவர்களால் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்
அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

முக்கியமாக சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கும் தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கான
நியமன தெரிவில் புறக்கணிப்புக்கள் காணப்படுவதாகவும், இனவிகிதாசாரம் பேணப்படவில்லை
எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.ள்ளார்.

35 சத வீதத்திற்கும் மேற்ப்பட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் சுமார் 1000 க்கும் மேற்ப்பட்ட
அதிபர் வெற்றிடங்கள் காணப்படுகின்றது எனவும் தமிழ் மொழி பரீட்சார்த்திகள் 167 பேரே
நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சின் இவ்வாறான நியமனங்களில் தெரிவு புறக்கணிப்புக்கள் காரணமாக 300 க்கும்
மேற்ப்பட்ட தமிழ்மொழி மூல ஆசிரியர்கள் பாதிப்படைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்
அங்கஜன் இராமநாதன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர் கல்வி தகமை மற்றும் உயர் தொழில் தகைமைகளையும் கொண்டிருப்பதோடு ஐம்பது
வயதை அண்மித்தவர்களும் உள்ளடங்குவதால், கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும்
தெரிவித்தார்.

கல்வி அமைச்சினால் அதிபர் சேவை நியமனம் அவசரமாக வழங்குவது தொடர்பாகவும், தவறான
வழிமுறைகள்,மற்றும் தமிழ்மொழி மூலமாணவர்களின் புறக்கணிப்புக்களை தேர்தல்
ஆணையாளருக்கும் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாதிப்படைந்தவர்களுக்கு தீர்வுகளை பெற்று கொடுக்கும் வகையிலும், பல்வேறு இடரான சூழ்
நிலைகளுக்கு மத்தியிலும் சிறந்த கல்வி சேவைகளை வழங்கி ஆரோக்கியமான கல்வி
சமுதாயத்தை நிலை நிறுத்தியவர்களின் நலன் கருதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன அவர்களிடம் தீர்வுகளை பெற்று கொடுப்பதற்காக தெரியப்படுத்தியுள்ளதாகவும்
தெரிவித்தார்.

மேலும் விடயத்திற்கு பொறுப்பான துறை சார் அதிகாரிகளுக்கும், உரிய நடவடிக்கைகளை
வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்
இராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்