வவுனியா மதுபானசாலைகள் பூட்டு

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வவுனியாவில்  இன்று (03.10.2019) அனைத்து மது விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளன

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் அனுமதி பத்திரம் பெற்ற நிலையங்கள் இன்று (ஒக்டோபர் 3) மூடப்பட வேண்டுமென கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதற்கு அமைவாக இன்றையதினம் (ஒக்டோபர் 3) நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் பத்திர அனுமதியுடனான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் வவுனியாவிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதி மதுவரி ஆணையாளர் கபில குமாரசிங்க அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்