சஜித்துக்கு ஒரு வாய்ப்பை தமிழ் மக்கள் கொடுக்க வேண்டும்

அடி மட்ட மக் களி ன் காலடிக்குச் சென்று சேவை பாற் றி வ ரும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிப தியாக வேண்டும். இதுவே சகல இன மக்களினதும் எதிர்பார்ப்பாகும். சஜித் ஜனாதிபதி யானால் இந் நாட்டில் அபிவிருத்தியும் சகவாழ்வும் சமத்துவமும் மிக்க சுபீட்சமான நிலை உருவாகும் என அகில இலங்கை மக்கள் ஜனநா யகக் கட்சியின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித் தார். ஐக்கிய தேசிய முன்ன ணியின் ஜனாதிபதி வேட் பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை அறிவித் துள்ளமை குறித்து கருத்து வெளி யி டு கை யி லேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்;

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். காலம் தொடக்கம் தற்போதைய ஜனாதிபதி மைத் தி ரி பால சிறிசேன வரை தமிழ் மக்கள் ஏமாற் றமடைந்து வந்துள்ளனர்.

இருப்பினும், புதிய தலை மைத்து வமாக உருவெ டுத்துள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச மனிதாபிமானத் திற்கு மதிப்பளித்து அனைத்து மக்களையும் ஒரு தாய் பிள்ளைகள் போன்று அரவணைத்துச் சேவை யாற்றி வந்துள்ளார். இந்த வகையில் நாம் இவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி எமது மக்களின் எண்ணங் கள், அபிலாசைகளை நிறை வேற்றிக் கொள்ள வேண் டும். தமிழ் மக்கள் வகைதொ கை யின்றி அழிக்கப் பட் ட னர். அவர்களின் பல ஆயிரம் கோடி ரூபா பெறு மதியான சொத்துகள் இல் லாமல் செய்யப்பட்டன. இவற்றையெல்லாம் கடந்த காலங்களில் அரங்கேற்றி யவர்கள் ஜனாதிபதி வேட் பாளர்களாக எம்மத்தியிலே வருகின்றனர். இவர்களும் டன் ஒப்பிடுகையில், சஜித்பிரேமதாச மேலான வர். ஆகவே, நாம் இவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்க வேண்டும் என்றார்.

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்