தான் ஒரு ஜெண்டில்மேன் என்பதனை உலகிற்கு காட்டிய ரணில்

ஆயுல்கால தலைவர், சஜித்தை ஒரு பொழுதும் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கமாட்டார், ரணில்தான் வேட்பாளர், ரேஸ்சினை ஆரம்பிப்பதற்கு முதல் சஜித்த ஓட ஆரம்பித்து விட்டார், விசர் நாய் கடித்தால் நாம் அந்த நாயினை ஒரு பொழுதும் கடிப்பதில்லை, சஜித் அரசியலில் ஒரு குளந்தை, சஜித் தனது தகுதியை தாண்டி சிந்திக்கின்றார், புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய தகப்பனை போன்றுதான் தனயனும் ஆட்சி செய்வார், இவ்வாறு அடிக்கிக்கொண்டு போகும் அளவிர்கு ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியாலும் நேற்று வரைக்கும் விமர்சிக்கப்பட்டவர்த்தான் ஐக்கிய தேசிய கட்ச்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச.

ஆனால் நேற்று  இடம் பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பேராளர் மாநாட்டில் விமர்சனங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தாற் போல் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க நடந்து கொண்ட முறையானது உண்மையில் அவர் ஒரு அரசியல் ஞானி என்பதற்கு அப்பால் அவர் அரசியலில் ஓர் ஜெண்டில்மேன் என்பதனை உலகிற்கு காட்டியமை இலங்கையில் மட்டுமல்லாது உலகத்தின் பார்வையினையும் ஈர்க்கும் விடயமாக மாறியுள்ளது.

முன்னால் ஜனாதிபதியும் சஜித்தினுடைய தகப்பானருமான ரணசிங்க பிரேமதாசவினுடைய பாரியாரான ஹேமா பிரேமதாசவினை தான் மேடையில் இருந்து கீழ் இறங்கி வந்து அவருடைய கையினை பிடித்து மேடைக்கு அழைத்துச்சென்று சஜித்தினுடைய பெயரினை வேட்பாளராக அறிவித்தார் பிரதமர் ரணில்.

இந் நிகழ்வானது உண்மையில் மாநாடு இடம் பெற்ற சுகததாச அரங்கத்தில் குழுமிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களை கண்கலங்க செய்ததுடன், தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்துக்கொண்டிருந்த மக்களின் மனங்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்திருக்காது.

ரணில் விக்கிரமசிக்க 1994ம் ஆண்டிலிருந்து கட்சியின் தலைமை பதவியினை வகித்து வந்தாலும் இன்று அவர் உலகறியும் வகையில் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாநாட்டில் நடந்து கொண்ட விதமானது ஊடகங்களுக்கு விருந்து வைக்கும் விடயமகவும், இலங்கையில் உள்ள முதிர்ச்சி அடைந்த அரசியல் வாதிகளில் தான் ஒரு சிறந்த பன்பாளர் என்பதற்கு அப்பால் தனது கண்ணியமான அரசியல் நாகரீகத்தினை பின்னால் வரப்போகும் சந்ததியினருக்கும், உலகிற்கும் சிறந்த படிப்பினையாகவும் வரலாறகவும் காட்டிய ஜெண்டில்மேனாக பதியப்பட்டுள்ளார் என கூறுவதில் மாற்றுக் கருத்தில்லை…

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்