யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் வாணி விழா; பிரதம விருந்தினராக முதல்வர் ஆனல்ட்!

யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் வாணி விழா. முதல்வர் ஆனல்ட் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

யாழ் மாநகர சபையின் சமய விவகார மற்றும் கலை பண்பாடு மேம்பாட்டுக் குழுவினரின்  ஏற்பாட்டில் வாணி விழாவும் கலை நிகழ்வுகளும் (4) யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் யாழ் மாநகர சபையின் சமய விவகார மற்றும் கலை பண்பாடு மேம்பாட்டுக் குழுவின் தலைவரும் யாழ் மாநகரசபையின் உறுப்பினருமாகிய கலைஞர் திரு.என்.எம். பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக  மாநகர சபை ஆணையாளர் திரு.இ.த.ஜெயசீலன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். கௌரவ மாநகரசபை உறுப்பினர்கள், யாழ் மாநகர பிரதி ஆணையாளர், நிர்வாக உத்தியோகத்தர்,  பிரதம பொறியியலாளர், பிரதம கணக்காளர், திணைக்களங்களின் தலைவர்கள், மாநகரசபை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்