வட மாகாணத்தின் பாதுகாப்பிற்கு நாங்களும் பொறுப்பு’ கௌரவ ஆளுநர் தலைமையில் ஆரம்ப நிகழ்வு

வடமாகாணத்தின் பாதுகாப்பிற்கு நாங்களும் பொறுப்பு என்ற கருப்பொருளிலான உறுதி மொழி எடுக்கும் வீதிபாதுகாப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் நாளை திங்கட்கிழமை (07) ஆளுநர் செயலகத்தில் நடைபெறவுள்ளது.

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகள் , அரச அலுவலகங்கள் , அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஆகியவற்றின் பிரதானிகளின் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அத்துடன் வீதிப்பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு வடமாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் அரசாங்க அதிபர்கள் தலைமையில் நாளை திங்கட்கிழமை (07)காலை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நடைபவனி நிகழ்வு தவிர்க்க முடியாத சில காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளதுடன் இந்த நடைபவனி நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) காலை 9.00 மணிக்கு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்